தென்னாபிரிக்க நாட்டுக்கு இறுதியாக இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கிரிக்கெட் வரலாற்றில் யாரும் எதிர்பாராத அதிசயம், அற்புதம் நிகழ்ந்திருந்தது. வெற்றி பெறவே முடியாதென நினைத்திருந்த டெஸ்ட் போட்டியை பல்வேறு சாதானைகளுடன் வெற்றி கொண்டது இலங்கை அணி. இதற்கு மிக முக்கிய பங்காற்றிய வீரர் குசல் ஜனித் பெரேரா.
தென்னாபிரிக்க மைதானத்தில் அதுவும் நான்காம் இன்னிங்சில் ஒரு ஆசிய வீரர் 200 பந்துகளை சந்திப்பதென்பதே இமாலய சாதனைதான். ஆனால், அதனை சந்தித்து 153 ஓட்டங்களை பெற்றதுடன், இறுதி 9ம் இலக்கத்தில் 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக புரிந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் குசல்.
மீண்டும் 6 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் இலங்கை அணி காலடி எடுத்து வைக்கிறது. இரண்டு அணிகளிலுமே மிகப்பெரும் மாற்றங்கள். இன்னும் சொல்லப்போனால் கொரோனா காரணமாக தென்னாபிரிக்க அணி பலவீனப்பட்டு போயிருக்கிறது. சரியான பதினொருவரை தேடிக்கொள்ள திணறி கொண்டிருக்கிறது. இலங்கை அணி பக்கமும் காயங்களும், உடற்தகுதியும் மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அணியில் மீண்டும் குசல் ஜனித் பெரேரா இடம்பெற்று இருக்கிறார். இலங்கைக்கு இம்முறை போட்டிகள் ஆரம்பிக்க முன்னமே வாய்ப்பொன்று இருக்கிறது.
அதிசயம் அற்புதம் மீண்டும் நிகழுமா ?
Post a Comment