NZvPAK : தொடரை கைப்பற்ற போவது யார் ? போட்டியை பார்ப்பது எப்படி ? | New Zealand vs Pakistan 2nd T20 Probable XI, Live Match, Ground Details and Stats




மூன்று போட்டிகளை கொண்ட இந்த டி20 போட்டித் தொடரில் முதல் போட்டியை நியூசிலாந்து அணி வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இரண்டாவது போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக மாறியிருக்கிறது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்ற முடியும். அதுபோல, பாக்கிஸ்தான் வெற்றி பெற்றால் மூன்றாவது போட்டி மிக விறுவிறுப்பான தொடரை தீர்மானிக்கும் போட்டியாக மாற்றம் பெறும்.

பாக்கிஸ்தான் அணியினை பொறுத்தவரையில் அவர்களிடம் பாபர் அசாம் இல்லாத குறை மிகப்பாரிய அளவில் தெரிகிறது. முதல் போட்டியில் தட்டுத்தடுமாறி 150+ ஓட்டங்களை பெற்றாலும், போட்டியின் இறுதி நேரத்தில் பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசாமை, மோசமான களத்தடுப்பு ஆகியவற்றினால் போட்டியை கோட்டை விட நேர்ந்தது.

நியூசிலாந்தின் துடுப்பாட்ட பக்கத்தில் குறைகள் இருந்தாலும் அவர்கள் முதற் போட்டியை வெற்றி பெற்று இருக்கிறார்கள். இரண்டாவது போட்டியில் அவர்களுடைய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்புவது அந்த குறையை நிவர்த்திப்பதாக ஆமையும்.

மைதான தன்மை 

Seddon Park மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் பாக்கிஸ்தான் அணி இதுவரை விளையாடிய இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது.

அணிவிபரம்

New Zealand (probable): 1 Martin Guptill, 2 Tim Seifert (wk), 3 Kane Williamson (capt), 4 Devon Conway, 5 Glenn Phillips, 6 Jimmy Neesham, 7 Daryl Mitchell, 8 Scott Kuggeleijn/Kyle Jamieson, 9 Tim Southee, 10 Trent Boult, 11 Ish Sodhi

Pakistan (probable): 1 Abdullah Shafique, 2 Mohammad Rizwan (wk), 3 Haider Ali, 4 Mohammad Hafeez, 5 Shadab Khan (capt), 6 Khushdil Shah, 7 Imad Wasim, 8 Faheem Ashraf, 9 Wahab Riaz, 10 Shaheen Afridi, 11 Haris Rauf

சுவாரசிய தகவல் 

  • டி20 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர் இஸ் சோதி நியூசிலாந்தின் அதிகூடிய விக்கெட்களை பெற்ற இரண்டாவது வீரராக வர இன்னும் நான்கு விக்கெட்கள் தேவையாக இருக்கிறது.

போட்டியை பார்ப்பது எப்படி ?




Post a Comment

Previous Post Next Post