ஐபில் பிளே ஆஃப் சுற்று நடந்து கொண்டிருக்கும் போதே நடராஜன் தன் முதல் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், ஐபில் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்காக பகுதிநேர பந்துவீச்சாளராக கூட இல்லாமல் ஒரு நெட் பவுலராக இருக்க வேண்டிய சூழ்நிலை நடராஜனுக்கு..! நினைத்துப் பாருங்கள், ஒரு சாதாரண நெட் பவுலராக இருக்க ஒரு மேட்ச் வின்னர் உள்ளார், இந்த நிலையில் அவர் வரும் ஜனவரி 3வது வாரத்தில் இந்த சுற்றுப் பயணம் முடிந்த பிறகுதான் தனது முதல் குழந்தையை முதல் முறையாக பார்க்க முடியும் ஆனால் கேப்டனோ முதல் டெஸ்ட் முடிந்த பிறகு தனது முதல் குழந்தை பிறக்க உள்ளதையொட்டி நாடு திரும்பி விட்டார்.
2020 ஐபிஎல் தொடரின் போது பிறந்த தனது குழந்தையைக் கூட பார்க்காமல் இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு ஒரு நியாயம் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு நியாயமா ? என்று இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் Sportstar பதித்திரிகைக்கு தான் எழுதியுள்ள பத்தியில் BCCI நிர்வாகத்தை நோக்கி கேள்வியை கேட்டிருக்கிறார்.
Post a Comment