இறுதியாக இலங்கை அணி தென்னாபிரிக்க மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற சரித்திரபூர்வ வெற்றியினை கிரிக்கெட் இரசிகர்கள் அத்தனை இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள். மீண்டும் அதே அதிசயம் , அற்புதம் நடக்குமா ? என்பதே எல்லோருடையதும் கேள்வியாக இருக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரை இலங்கை அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது ஒரு பாதகமான விடயம்தான். கடந்த மார்ச் மாதம் முதல் எந்தவொரு சர்வதேச போட்டியிலு விளையாடும் வாய்ப்பை இலங்கை வீரர்களுக்கு கொரோனா காரணமாக கிட்டவில்லை. இதற்கு மேலாக, கொரோனா காரணமாக தென்னாப்பிரிக்காவில் விளையாடவேண்டிய பயிற்சி போட்டியிலும் விளையாட முடியாமல் நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை அணியினை பொறுத்தவரை அவர்கள் விளையாடவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அனுபவீரர் மத்தியூஸ் இல்லாத குறையும், போட்டி இடம்பெறும் செஞ்சூரியன் மைதானமும் இன்னுமொரு பாதகமாக இருக்கிறது,
மறுபுறம், இலங்கைக்கு சமமான ஒரு தென்னாபிரிக்க அணியே இம்முறை டெஸ்ட்டில் களம் காணுகிறது என்பது ஒரு ஆறுதல். கொரோனா பாதிப்பு தென்னாபிரிக்காவின் முழு பலமான அணியினை களமிறக்க முடியாத சூழ்நிலையை உருவாகியிருக்கிறது.
மைதான தன்மை
செஞ்சூரியன் மைதானத்தில் இந்த இரு அணிகளும் நான்கு தடவைகள் சந்தித்து இருக்கிறது. நான்கு தடவைகளுமே தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருக்கிறது. நாளை போட்டி இடம்பெறவிருக்கும் ஆடுகளம் துடுப்பாட்டம், பந்துவீச்சுக்கு சமதன்மை கொண்ட ஆடுகளம் ஒன்று. முதல் நாளின் முதல் மணிநேர ஆட்டத்தை துடுப்பாட்ட வீரர்கள் கடந்துவிட்டால் அடுத்து வரும் மூன்று நாட்களும் சிறப்பானதாக இருக்கும். இறுதி இரண்டு நாட்கள் மீண்டும் பந்துவீச்சாளர்கள் கை ஓங்கும். அதிவேக பவுன்சர்களுக்கு தயாராக இருக்கவேண்டியது அவசியம்.
அணி விபரம்
Sri Lanka (probable): 1 Dimuth Karunaratne (capt.), 2 Kusal Perera, 3 Kusal Mendis, 4 Dinesh Chandimal, 5 Dhananjaya de Silva, 6 Dasun Shanaka, 7 Niroshan Dickwella (wk), 8 Suranga Lakmal/Kasun Rajitha, 9 Lasith Embuldeniya, 10 Vishwa Fernando, 11 Lahiru Kumara
South Africa (probable): 1 Aiden Markram, 2 Dean Elgar, 3 Rassie van der Dussen, 4 Faf du Plessis, 5 Temba Bavuma, 6 Quinton de Kock (capt. & wk), 7 Dwaine Pretorius, 8 Anrich Nortje, 9 Keshav Maharaj, 10 Glenton Stuurman, 11 Lungi Ngidi
சுரங்க லக்மால் பயிற்சியின்போது காயமடைந்திருப்பதால் நாளைய நாளில் அவர் விளையாடுவாரா ? இல்லை அவருக்கு பதில் ராஜித விளையாடுவாரா ? என்கிற கேள்வி நிலவுகிறது.
சுவாரசிய தன்மை
- இலங்கை அணிக்கெதிரான தென்னாபிரிக்க தலைவர் Quinton de Kock ஓட்டங்களை அதிகமாக பெறுவதை விரும்பும் ஒருவராக இருக்கிறார். இறுதி நான்கு இன்னிங்சில் மூன்று அரை சதங்களை பெற்றிருக்கிறார்.
- இதுவரை இலங்கை அணி தென்னாபிரிக்க அணியினை 9 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்கிறது. 14 டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருக்கிறது.
எதிர்பார்க்கும் போட்டி முடிவு
சொந்த மைதானத்தில் விளையாடுவதும், கடந்தகால பெறுபேறுகளும் தென்னாபிரிக்க அணியிற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்த அன்னிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இருந்தபோதிலும், கொரோனா காரணமாக பலவீனமான அணியினை இலங்கை வெற்றிகொள்ள இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது.
போட்டியை பார்ப்பது எப்படி ?
இலங்கை - இந்திய இரசிகர்கள் இந்த போட்டியை Start Sports வாயிலாக பார்க்க முடியும்.
Post a Comment