INDvAUS : அஸ்வினின் முக்கிய 2 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) | Ashwin Dismisses Smith for Zero


 

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் மிக முக்கிய இரண்டு விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த M Wadeயினை தனது பந்துவீச்சுயுடன், ஜடேஜாவின் சிறப்பான களத்தடுப்பு மூலமும் ஆட்டமிழக்க செய்ததுடன், MCGயின் அரசன் என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை எந்தவொரு ஓட்டமும் பெறாமலேயே  ஆட்டமிழக்க செய்திருந்தார். இந்திய அணிக்கெதிராக ஸ்மித் ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை என்பதுடன், அஸ்வின் இவரை தொடர்ந்து மூன்று இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்த பெருமையையும் பெற்றிருக்கிறார்.



Post a Comment

Previous Post Next Post