நியூசிலாந்து - பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே பல விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பாக்கிஸ்தான் குழாம் போதுமான பயிற்சிகள் இல்லாமலே மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரை ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கிடையில் அவர்களுடைய அணித்தலைவர் பாபர் அசாம்க்கு ஏற்பட்டிருக்கும் காயமும் மேலதிக தலைவலியாக மாறியிருக்கிறது.
மைதான தன்மை
ஈடன் பார்க் மைதானத்திலேயே இந்த போட்டி இடம்பெற இருக்கிறது. இந்த மைதானம் சிறியதும், தட்டையானதுமான ஆடுகளம் என்பதால் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி 160+ மேற்பட்ட ஓட்டங்களை பெறுவதே வெற்றிக்கு போதுமான இலக்காக இருக்கும்.
அணிவிபரம்
New Zealand (possible): 1 Martin Guptill 2 Tim Seifert 3 Devon Conway 4 Glenn Phillips 5 Mark Chapman 6 James Neesham 7 Mitchell Santner (capt) 8 Todd Astle 9 Ish Sodhi 10 Scott Kuggeleijn 11 Blair Tickner/Jacob Duffy
Pakistan (possible):: 1 Haider Ali 2 Abdullah Shafique 3Shadab Khan (capt) 4 Mohammad Hafeez 5 Iftikhar Ahmed/Faheem Ashraf 6 Khushdil Shah 7 Mohammad Rizwan 8 Imad Wasim 9 Wahab Riaz 10 Haris Rauf 11 Shaheen Afridi
நியூசிலாந்தின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் மகப்பேறு காரணமாகவும், பாக்கிஸ்தானின் முன்னணி வீரர் பாபர் அசாம் காயம் காரணமாகவும் இந்த தொடரை தவறவிடுகிறார்கள்.
சுவாரசிய தகவல்
- ஈடன் பார்க் மைதானத்தில் இறுதியாக இந்த அணிகள் சந்தித்து கொண்ட இரண்டு தடவையும் பாக்கிஸ்தான் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இறுதியாக, இந்த மைதானத்தில் நியூசிலாந்து பாக்கிஸ்தான் அணியை 2010ல் வெற்றி பெற்றிருக்கிறது.
- இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி 9 தடவைகளுக்கு, இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி 10 தடவைகளும் வெற்றி பெற்றிருக்கிறது.
போட்டியை பார்ப்பது எப்படி ?
இங்கே நேரலையாக 11 மணி முதல் நீங்கள் போட்டியை பார்க்கலாம்.
Post a Comment