இலங்கை கிரிக்கெட்டில் மறக்க முடியாத புனை பெயர்களில் ஒன்று "சின்ன களு"(Little Kalu). பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் டொனி கிரேக் வாயால் வழங்கப்பட்ட பட்டம் இலேசில் மறையுமா என்ன ?
ரொமேஷ் களுவித்தாரண என்றதும் எல்லோர் நினைவுக்கும் வருவது, ஒருநாள் போட்டிகளின் ஆரம்ப துடுப்பாட்டத்தை அதிரடியாக கட்டி ஆண்ட "சனா-களு" ஜோடி. சனத் ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்துக்கு பக்கபலமாகவிருந்த களுவித்தாரண, சனத் மிகவிரைவாக ஆட்டமிழந்து போகின்றசமயங்களில் அந்த அதிரடி பொறுப்பை கையிலெடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல தவறியதில்லை.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்ட ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். 49 டெஸ்ட் போட்டிகளில் 1,933 ஓட்டங்களையும், 189 ஒருநாள் போட்டிகளில் 3,711 ஓட்டங்களையும் விளாசிய களு , மின்னல் வேக விக்கெட் காப்புக்கு பெயர் போனவர். அந்த களத்தடுப்பு கூட பல போட்டிகளின் முடிவை மாற்றியிருக்கிறது.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ரொமேஷ் களுவித்தாரண, 1996ம் ஆண்டு இலங்கைக்கு உலகக்கிண்ண பெருமையை சேர்த்தவர்களில் ஒருவர் என்பதுடன், 90களில் கிரிக்கெட் ஆட்டத்தை மாற்றிப்போட்டஇணையிலும் முக்கிய பங்காளி ஆவார்.
Post a Comment