LPL போட்டிகளில் இன்னுமொரு தமிழர் ?

 இலங்கையில் இடம்பெறுகின்ற லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் இணைந்துகொள்ள இன்னுமொரு தமிழ் வீரருக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Jaffna Stallions அணியின் சார்பிலேயே இந்த வீரருக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.




இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL)  தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இறுதி 2 வீரர்கள் குழாமில், கிளிநொச்சி வீரரான செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் வலைப் பந்துவீச்சாளராக அணியில் இணைக்கப்படுவதாக அறிவித்திருந்தது. எனினும், அவரது திறமையை கணித்துக்கொண்ட அந்த அணி நிர்வாகம், விஜயராஜை தங்களது இறுதி குழாத்துடன் இணைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது.

இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் முதல்முறையாக தேசிய மட்டத்தில் முன்னணி அணியொன்றுக்கு இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய பந்து வீச்சு பாணியை காண - 



Post a Comment

Previous Post Next Post