லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குகொள்ளும் இந்திய வீரர் ஒருவருக்கும், தொழில்நுட்ப குழுவிலிருக்கும் இந்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் insidesport நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இம்முறை LPL போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த Munaf Patel, Irfan Pathan, Sudeep Tyagi & Manpreet Gony ஆகியோர் பங்குகொள்ள இலங்கை வருகை தந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் ஒருவருக்கே இந்த கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதுவரை இலங்கை அரசாங்கமோ அல்லது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ இதுதொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ செய்தியையும் வெளியிடவில்லை.
Post a Comment