மிக நீண்ட இடைவேளைக்கு பின்பு, இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் மோத இருக்கின்றன.
இந்த தொடரின் முதலாவது போட்டியாக ஒருநாள் போட்டி தொடர் எதிர்வரும் 27ம் திகதி இலங்கை-இந்திய நேரப்பபடி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது.
இந்த ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி கடந்த 2009ம் ஆண்டு முதல் தான் விளையாடும் மூன்றுவகையான போட்டிகளில் ஏதெனுமொன்றில் சதம் பெற்றே வந்திருக்கிறார். ஆனால், இந்த 2020ம் ஆண்டில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடாத காரணத்தினால் இன்னமும் ஒரு சதத்தை கூட பெற்றிருக்கவில்லை. அத்தோடு, அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் அடம் சாம்பாவுக்கு எதிராக மோசமான துடுப்பாட்ட பெறுதியை கொண்டிருப்பதால் அவரால் 2020ல் சதமொன்றினை பெற முடியுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சர்வதே ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியை அதிக தடவைகள் ஆட்டமிழக்க செய்தவர் என்கிற சாதனை அடம் சாம்பா வசமே இருக்கிறது. இதுவரை அடம் சாம்பாவின் 148 பந்துகளை சந்தித்து 178 ஓட்டங்களை கோலி பெற்றிருக்கிற போதும், 5 தடவைகள் தனது விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். இதனால்தான் என்னவோ, அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள விராட் கோலி ஐபில் போட்டிகளில் சாம்பாவை தன்னுடைய அணியில் தேர்வு செய்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
Post a Comment