#INDvAUS : Sony நேரடி ஒளிபரப்பில் மாற்றம் ?


இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் மோத இருக்கின்றன.

இந்த தொடரின் முதலாவது போட்டியாக ஒருநாள் போட்டி தொடர் எதிர்வரும் 27ம் திகதி இலங்கை-இந்திய நேரப்பபடி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது.

இம்முறை இந்த போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யவிருக்கும் Sony Network நிறுவனத்தினர் தங்களுடைய ஒளிபரப்பில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

இந்த போட்டிகள் அனைத்துமே Sony Six , Sony Ten 1 , Sony Ten 3 ஆகிய அலைவரிசைகளின் SD மற்றும் HD தரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த போட்டிகள் அனைத்தையும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய தீர்மானித்து இருக்கிறார்கள். இணையத்தின் வழியாக போட்டிகளை பார்க்கும் இரசிகர்கள் SonyLiv தளத்தில் விரும்பிய மொழி மூலமாக இந்த போட்டியை கண்டு இரசிக்க முடியும்.

இம்முறை ஐபில் போட்டிகளின் போது பிராந்திய மொழி வர்ணனைகளுக்கு கிடைத்த வரவேற்பு Sony Network நிறுவனத்தினரையும் இந்த முறையை நோக்கி நகர வைத்திருக்கிறது. இதன்படி, பின்வரும் நேரடி வர்ணனையாளர்கள் கிரிக்கெட் போட்டி இடம்பெறும் நேரத்தில் தங்களுடைய வர்ணனையை மொழி ரீதியாக வழங்க தயாராக இருக்கிறார்கள்.



ஒருநாள் போட்டிகள்

First ODI: November 27, Sydney Cricket Ground (SCG), 9:10 AM IST

Second ODI: November 29, SCG, 9:10 AM IST

Third ODI: December 2, Manuka Oval, 9:10 AM IST

T20 போட்டிகள்

First T20: December 4, Manuka Oval, 1:40 PM IST

Second T20: December 6, SCG, 1:40 PM IST

Third T20: December 8, SCG, 1:40 PM IST

டெஸ்ட் போட்டிகள்

First Test: December 17-21, Adelaide Oval, 9:30 AM IST (day-night)

Second Test: December 26-30, MCG, 5:00 AM IST

Third Test: January 7-11, SCG, 5:00 AM IST

Fourth Test: January 15-19, Gabba, 5:30 AM IST


Post a Comment

Previous Post Next Post