#OnThisDay - உலகக்கிண்ணம் வாங்கி தந்த கேரி கிறிஸ்டன்

 

தென்னாபிரிக்காவின் அற்புதமான முன்னாள் துடுப்பாட்ட வீரர். இன்று உலகமே வியக்கும் மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளர். இயன் செப்பலின் பயிற்றுவிப்பில் தடுமாறி போய்கிடந்த இந்திய அணியை ஒன்றிணைத்து 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்ததில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. மகேந்திர சிங் தோனி போல மாறுபட்ட சிந்தனை, இளைய வீரர்கள் மீதான நம்பிக்கை, அனுபவ வீரர்களை சரியாக பயன்படுத்தி கொண்டமை என்கிற ஒற்றுமை இவர்கள் இருவரையும் 2011ம் ஆண்டு உலகக்கிண்ணம் வெல்லுவரை சேர்த்து பயணிக்க வைத்தது என்று சொல்லலாம்.

ஆனால், பயிற்றுவிப்பாளராக முன்பு, தென்னாபிரிக்காவின் தவிர்க்க முடியாத துடுப்பாட்ட வீரர் இவர். அந்த அணிக்காக முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்கள் என்கிற மைல்கல்லை எட்டியவர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கிறிஸ்டன்  தென்னாபிரிக்க அணிக்காக பெற்றுக்கொடுத்த வெற்றிகள் ஏராளமாக இருந்தாலும், உலகக்கிண்ணத்தை அவர் தென்னாபிரிக்க சார்பில் பெற்றிருக்க முடியவில்லை. இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராகவே அதனை அனுபவிக்க முடிந்தது விந்தை.

கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கேரி கிறிஸ்டனுக்கு இன்று 52 வது பிறந்தநாள் 

Post a Comment

Previous Post Next Post