கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள் ?

அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கும் BBL T20 போட்டிகளில் இரசிகர்களை கவரும் வகையில் புதிதாக மூன்று விதிமுறைகளை அவுஸ்திரேலிய நிர்வாகம் நடைமுறைப்படுத்த இருக்கிறதென்பது உங்களுக்கு தெரியுமா ?

01. Power Surge

வழமையாக முதல் 6 ஓவர்கள் மட்டுமே Power Play ஓவர்களாக இருக்கும். ஆனால், இந்த புதிய விதிமுறையின்படி முதல் நான்கு ஓவர்கள் மட்டுமே கட்டாய Power Play ஆக இருக்கும். மீதி இரண்டு ஓவர்களையும் துடுப்பாட்ட அணி 11-20 ஓவருக்குள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

02. Bash Boost

போட்டியில் வெற்றிகொள்ளும் அணிக்கு 4 புள்ளிகள் கிடைக்கும். அதிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது BBL. போட்டியில் வெற்றி பெறின் நேரடியாக 3 புள்ளிகள் கிடைக்கும். அதுபோல, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 10வது ஓவர் முடிவில், இரண்டு அணிகளின் ஓட்ட எண்ணிக்கையும் ஒப்பீடு செய்யப்பட்டு எந்த அணி அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருக்கிறதோ, அந்த அணிக்கு 1 புள்ளி வழங்கப்படும்.

03. X-Factor

கடந்த காலங்களில் நடைமுறையிலிருந்த Super Subக்கு ஒப்பான விதிமுறை இது. ஒவ்வொரு அணியினதும் 10வது ஓவரின்போது, இரண்டு அணிகளுமே தங்களுடைய அணி பட்டியலில் பெயரிடப்பட்டிருக்கும் 12வது அல்லது 13வது வீரரை விளையாடும் பதினொருவரில் உள்ள வீரருக்கு பதில் பயன்படுத்த முடியும். மாற்றீடு செய்யப்படும் வீரர் அதுவரை துடுப்பெடுத்தாடாத வீரராக அல்லது ஒரு ஓவர் அல்லது பந்துவீசாத வீரராக இருக்க வேண்டும். இந்த விதிமுறை காரணமாக, போட்டியின் ஆரம்பத்தில் ஒரு பந்து வீச்சாளர் காயமடைந்தாலும் அந்த அணி 10வது ஓவர் வரை காத்திருந்தே புதிய பந்து வீச்சாளரை கொண்டுவர முடியும்.

இந்த புதிய விதிமுறைகள் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பை கூட்டுமா ? இரசிகர்களின் ஆர்வத்தினை அதிகரிக்குமா ? என்பதனை அறிந்துகொள்ள டிசம்பர் 10ம் திகதி வரை காத்திருக்க வேண்டும்

Post a Comment

Previous Post Next Post