போட்டி விபரம்
Date: November 27, 2020 (Friday)
Time: 09:10 AM (IST)
Venue: Sydney Cricket Ground, Sydney
ஆடுகள & காலநிலை நிலவரம்
SCG மைதானம் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கும், முதல் ஓவர்களை வீசுகின்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமான மைதானம். துடுப்பாட்ட வீரர்கள் கொஞ்சம் பந்துகளை எடுத்துக்கொண்டு ஆடுகளத்தில் செட்டில் ஆகிவிட்டால், அவர்களை நிறுத்தவே முடியாது. அதுபோல, ஒப்பீட்டளவில் சுழற்பந்து வீச்சாளர்களை விட, வேகப்பந்து வீச்சாளர்கள் திறமை காட்டும் மைதானமாக நாளைய ஆடுகளம் இருக்கப்போகிறது. எனவே,முதலில் துடுப்பெடுத்தாடும் அணி வெற்றிபெற 270+ ஓட்டங்களை பெறுவது மிக அவசியமான ஒன்றாகும்.
காலநிலையை பொறுத்தவரையில், எந்தவித மழை குறுக்கீடுமில்லாமல் போட்டி முழுமையாக நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது என சொல்ல ஆசை கொண்டிருப்பினும், மழையால் சிறிதளவிலான பாதிப்புக்கள் வர வாய்ப்புள்ளது என்பதே உண்மை.
அவுஸ்திரேலிய XI
David Warner, Aaron Finch (C), Steve Smith, Marnus Labuschagne, Marcus Stoinis, Glenn Maxwell, Alex Carey (WK), Pat Cummins, Mitchell Starc, Josh Hazlewood, and Adam Zampa.
இந்திய XI
Mayank Agarwal, Shikhar Dhawan, Virat Kohli(C), Shreyas Iyer, KL Rahul(WK), Hardik Pandya, Ravindra Jadeja, Shardul Thakur/ Navdeep Saini, Yuzvendra Chahal, Mohammed Shami, and Jasprit Bumrah.
Dream11 அணி
Fantasy Suggestion 1: KL Rahul, Shikhar Dhawan, Shreyas Iyer, Aaron Finch, Steve Smith, Glenn Maxwell, Ravindra Jadeja, Adam Zampa, Jasprit Bumrah, Mitchell Starc and Mohd Shami
Captain: Aaron Finch, Vice-Captain: Shikhar Dhawan
Fantasy Suggestion 2: KL Rahul, Shikhar Dhawan, Virat Kohli, David Warner, Steve Smith, Marcus Stoinis, Ravindra Jadeja, Adam Zampa, Jasprit Bumrah, Mitchell Starc and Navdeep Saini
Captain: Steve Smith, Vice-Captain: Shikhar Dhawan
வெற்றி யாருக்கு ?
போட்டிகள் இடம்பெறும் நாடென்ற வகையில் அவுஸ்திரேலிய அணிக்கான சாதகத்தன்மை அதிமாக இருக்கிறது. David Warner, Aaron Finch (C), Steve Smith, Marnus Labuschagne, Marcus Stoinis என போர்மிலிருக்க கூடிய வீரர்களின் துடுப்பாட்ட பலமும், Mitchell Starc, Josh Hazlewoodயின் வேகமும் இந்த அணிக்கு சாதகம்.
மறுபக்கம் ரோகித் சர்மா இல்லாதநிலை இந்திய அணிக்கு பலவீனமாக இருக்கிறது. இருந்தபோதிலும், அந்த இடத்தினை மீள்நிரப்பும் வாய்ப்பு இளையவர்கள் பக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. அவுஸ்திரேலிய மைதானங்களில் விராட் கோலி விஷ்வரூபம் எடுத்தால், இந்தியாவின் வெற்றி உறுதியே...!
ஆனாலும், தற்போது வரை அவுஸ்திரேலிய அணியே Favourite அணியாக இருக்கிறது.
Post a Comment