LPL இறுதி போட்டியில் வெற்றி யாருக்கு ? | GG vs JS - Playing-11 Updates for Today's Lanka Premier League Match - Dec 16th, 2020

 


லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாதென எதிர்பார்க்கப்பட்ட Galle Gladiators அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அதுபோல, இந்த லீக் போட்டி ஆரம்பித்தது முதலே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Jaffna Stallions அணி மிக விரைவாகவே அரையிறுதி போட்டிக்கு தகுதியை பெற்று விட்டாலும், அரையிறுதி போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட தோல்விகளால் அந்த அணி மீதான சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் அதனை தவிடு பொடியாக்கி இறுதி போட்டிக்கு தயாராகி விட்டோம் என்பதை உணர்த்தி இருந்தார்கள். இப்போது இந்த இரண்டு அணிகளில் யார் முதலாவது சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறார் ? என்பதே எல்லோரிடத்திலிருக்கும் கேள்வி.


விளையாட கூடிய  XI

Galle Gladiators

Danushka Gunathilaka, Ahsan Ali, Bhanuka Rajapaksa (C), Azam Khan, Sahan Arachchige, Shehan Jayasuriya, Chanaka Ruwansiri, Dhananjaya Lakshan, Mohd Amir, Lakshan Sandakan and Nuwan Thusara

Jaffna Stallions

Avishka Fernando, Johnson Charles, Charith Asalanka, Thisara Perera (C), Shoaib Malik, Chaturanga de Silva, Wanindu Hasaranga, Dhananjaya de Silva, Suranga Lakmal, Usman Khan Shinwari and Duanne Olivier

இறுதி சில போட்டிகளில் Galle Gladiators அணியிடம் அணியாக விளையாடும் பண்பையும், களத்தடுப்பில் ஓரளவுக்கு முன்னேற்றத்தையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக, அவர்களின் ஆரம்ப பந்துவீச்சு கூட்டணி ஆமிர்  - நுவான் துசார (சின்ன மாலிங்க) மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணதிலக தடுத்து நிறுத்த முடியாத ஒருவராக இருக்கிறார். Jaffna Stallions இவர்களை இதற்கு முன்பே சந்தித்திருந்தாலும், தற்போது Galle Gladiators விளையாடும் விதமே வேறாக இருக்கிறது. எனவே, இன்னும் அவதானமாக கையாளாவிடின் அதிர்ச்சி சாம்பியன்களாக காலி அணியினர் மாறக்கூடும்.

மறுபுறமாக, Jaffna Stallions அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானிய வீரர் மாலிக் பெறுபேறுகள் கவலைதருவதாக இருக்கிறது. அரையிறுதி போட்டியில் சார்லஸ் தன்னுடைய முக்கியத்துவத்தினை உணர்த்தியது போல, இறுதிப் போட்டியில் மாலிக்கும் இந்த துடுப்பாட்ட கூட்டணியுடன் இணைந்து கொண்டால் Jaffna Stallions அணியை தடுத்து நிறுத்த முடியாது. கூடவே, அவர்களின் மிக முக்கிய ஆயுதமாக Wanindu Hasaranga இருக்கிறார். அவரை பயன்படுத்தி முக்கியமான சந்தர்ப்பங்களில் விக்கெட்களை எடுக்கின்றபோது சாம்பியன் பட்டம் Jaffna Stallionsக்கு தூரத்திலில்லை.

மைதான தன்மை

அம்பாந்தோட்டை மைதானத்தின் அளவு 160+ க்கு மேலான ஓட்டங்களையே உத்திரவாத வெற்றி இலக்காக எப்போதும் கொண்டிருக்கிறது. ஆனாலும், கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் கை உயர்ந்துவருவதை அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக, பவர்பிளே ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிக்கவேண்டியது அவசியமாகிறது. இதன்மூலம், அடுத்து வருகின்ற 7-15 ஓவர்களுக்குள் 120 ஓட்டங்களை அணி கடந்துவிட்டால் எதிரணிக்கு இறுதி 5 ஓவர்களை பயன்படுத்தி 160+க்கும் மேற்பட்ட ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து கொள்ள முடியும். இதன் மூலம், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு அழுத்தங்களை உருவாக்கலாம். 

நாணய சுழற்சி

பெரும்பாலான இறுதி போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு பிரத்தியேக அழுத்தமிருப்பதை தவிர்க்க முடியாது. இதன்காரணமாக, பெரும்பாலான அணிகள் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதையே விரும்பும். இருந்தபோதிலும் இந்த மைதானத்தின் Dew தன்மையை கருத்தில்கொண்டு பந்துவீச்சாளர்கள் கைகொடுத்தால் இரண்டாவது துடுப்பாட்டத்தில் 150+ ஓட்டங்களை சேஸ் செய்து சாம்பியன் பட்டத்தை பெறுவது கடினமான ஒன்றல்ல.

கவனிக்கப்பட வேண்டியவர்கள் 

Galle Gladiators

Danushka Gunathilaka, Dhananjaya Lakshan, Mohd Amir and Nuwan Thusara

Jaffna Stallions

Avishka Fernando, Johnson Charles, Wanindu Hasaranga, Dhananjaya de Silva and Usman Khan Shinwari

சாம்பியன் வாய்ப்பு - Jaffna Stallions


Fantasy Suggestion 1: A Khan, J Charles, D Gunathilaka, S Malik, B Rajapaksa, W Hasaranga, T Perera, D de Silva, D Lakshan, M Amir and U Khan Shinwari

Captain: D Gunathilaka, Vice-Captain: W Hasaranga

Fantasy Suggestion 2: A Khan, A Fernando, D Gunathilaka, C Asalanka, A Ali, W Hasaranga, T Perera, D de Silva, D Lakshan, M Amir and U Khan Shinwari 

Captain: A Fernando, Vice-Captain: D Gunathilaka

Post a Comment

Previous Post Next Post