இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்க வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக Inside Sports நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஆஸி அணியின் Mitchell Starc பந்துவீசும் போது உருவாகின்ற கால் தடங்களை பயன்படுத்தி Nathan Lyon சிறப்பாக பந்துவீசுவதை அவதானித்திருக்கும் இந்திய குழு, நடராஜனை சிட்னி மைதானத்தில் விளையாட வைக்கின்றபோது இந்த முறை அஸ்வின் & ஜடேஜா ஜோடிக்கு இன்னும் வாய்ப்பாக அமையும் எனவும் எதிர்பார்க்கிறது. இதைவிட முக்கியமாக, Shardul Thakur & Navdeep Sainiயை விட ஒவ்வொரு பந்துகளையும் வேறுபட்டவகையில் வீசும் புதுமுகமாக நடராஜனுக்கு வாய்ப்பு அதிகமிருப்பதாக அந்த செய்தி மேற்கோள் காட்டி இருக்கிறது. அணித்தலைவர் ரஹானே சிபாரிசும் நடராஜன் பக்கமிருப்பது கூடுதல் பலம்
2020ல் ஒருநாள் & டி20 போட்டிகளில் அமைந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட நடராஜனுக்கு, 2021ன் ஆரம்பம் என்ன வாய்ப்பை தரப்போகிறது என்பதை 7ம் திகதி ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியில் அறிந்துகொள்ள முடியும்.
Post a Comment